அன்பான தமிழ் பெற்றோர்களுக்கு வணக்கம்,நமது பள்ளியின் முதல் செய்தி மடல் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வருடம் நமது பள்ளியில் நிறைய மாற்றங்களை உணர்வீர்கள் என நம்புகிறேன்.
அதில் நாங்கள் முக்கியமாக கருதுவது இந்த வருடம் வாங்கிய தமிழ் credit. இரண்டு மாணவர்கள் அவர்களின் பள்ளிச் சான்றிதழில் தமிழ் கிரிடிட் இருக்கும். இனி வரும் காலங்களில் அனைத்து மாணவர்களும் தமிழ் credit வாங்குவார்கள் |
|
இராண்டாவதாக வாழ்விற்கு எழுபது குறள்: ஒவ்வொரு மாணவரும் பள்ளியைவிட்டு செல்லும்பொழுது எழுபது குறள் மிக தெளிவாக தெரிந்திருக்கும்
மூன்றாவதாக சேர சோழ பாண்டிய மற்றும் பல்லவ அணிகள். இதனுடன் சேர்த்து மஸ்கட். இதில் முதற் படியாக வரும் வாரம் திருக்குறள் போட்டி. இது பாட்டு போட்டியாக நடக்க இருக்கிறது. இதை நல்லபடியாக நடத்த திருக்குறள் குழுவிற்கும் ஆசிரியர்கலுக்கும் வாழ்த்துக்கள். நான்காவதாக மோகன் எடுத்திருக்கும் மாணவர்களின் உச்சரிப்பு மற்றும் புத்தகம் எழுதும் துறை. இது மாணவர்களின் வாழ்நாளைய பழக்கமாக இருக்கபோகிறது. அவரது முயற்சிக்கு அனைவரும் உதவுங்கள். |
![]() |
ஐந்தாவதாக, ஆசிரியர்களுக்கும் நல்ல தமிழ். இதை நான் வாரம் ஒரு பாடமாக கீழ் இருக்கும் புத்தங்களில் இருந்து எழுத போகிறேன். இந்த புத்தகங்களை நமது பள்ளியின் மூலம் அச்சடிக்க முயற்சிக்கிறோம்.
![]() |
![]() |
நமது நூலகத்தில் எல்லா நல்ல புத்தகங்களும் கிடைக்கின்றன. அதை செம்மனே செய்யும் பிரதீப்க்கு நன்றியும் வாழ்த்துக்களும். இதை நல்லவிதமாக பயன்படுத்துங்கள்
இந்த மடல் கொண்டுவர உழைக்கும் தீபா மற்றும் குழுவினர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
இவற்றை எல்லவிடவும் பெட்றோர்களை பிள்ளைகளுக்காக நல்ல தமிழ் பேச வைக்க போகிறோம்.
நம்புங்கள் நாம்தான் அமெரிக்க தமிழின் முன்னோடிகள்
அன்புடன்,
ரவி பழனியப்பன்
மாணவர்கள் அனைவரும் இவ்வருடம் முதல் திருக்குறள் படித்தல் வேண்டும்கற்க கசடற என்பதை போல் , தமிழ் கற்றுக்கொண்டேன் என்று திருக்குறள் பயிலாமல் சொன்னால் , அவர் வெறும் புத்தக புழுவே. ஒவ்வொரு மாதமும் தலா ஒரு திருக்குறள் விகிதம் , ௧௦ (10) மாதங்களில் ௧0(10) குறள், இவ்வகையில் தமிழின் யாப்பையும் கற்றுக்கொள்வர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தயவு செய்து திருக்குறள் கற்றுக் கொடுக்க உதவி செய்யுங்கள்.மேலும் அனைத்து மாணாக்கர் ௪ (4) பிரிவாக தங்கள் திருக்குறளை பகிர இருக்கின்றனர். | |
![]() |
எந்தப் பிரிவு அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ , அவர்களுக்கு செங்கோல் சென்றடையும். இவ்வாறாக இந்தப் போட்டிகளைச் செவ்வனே கொண்டு செல்ல பெற்றோர்களின் ஊக்கம் மிகவும் தேவைப்படுகிறது. |
சென்ற வாரங்களில் பள்ளியில் பல செயற்பாடுகள் நடந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது நம் பள்ளிக்கு விருந்தினர் விரிவுரைக்காக தென் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த திரு. சுந்தர் பாலசுப்ரமணியன் அவர்களின் விரிவுரையானது .
“பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே” – திருமூலர் அருளிய திருமந்திரம் 558
மேலும் அவரின் விரிவுரை பதிவினை நமது அமைப்பின் முகநூலில் காணலாம்.
மாணவர்கள் வீட்டுப்படங்களை நன்கு படித்து வர கேட்டுக்கொள்கிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுது நேரம் ஒதுக்கி , சரிவர வீட்டுப்பாடங்களைச் செய்து முடிக்க உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விருந்தினர் விரிவுரையின்ப்போது
இலில்பெர்ன் தமிழ்ப்பள்ளி
3737 Brock Road NW,
Duluth , GA – 30096
Email – tamilpallililburn@gmail.com